தமிழ் முஸ்லிம் மக்களிடையே வேறுபாடுகளை களைவதற்கு கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவேண்டும் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 14, 2019

தமிழ் முஸ்லிம் மக்களிடையே வேறுபாடுகளை களைவதற்கு கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவேண்டும்

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலுக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்ட நிலைமையின் காரணமாக இனங்களுக்கிடையே ஏற்பட்ட தவறான நிலைப்பாட்டை இல்லாது ஒழிப்பதற்கு சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையில் அடிக்கடி கலந்துரையாடல்களும் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற வேண்டுமென்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ தெரிவித்துள்ளார்.

இதே போன்று முஸ்லிம் மக்கள் இலங்கையர் என்ற வகையில் முஸ்லிம் கலாச்சாரம் மற்றும் அதன் அடையாளத்தை பாதுகாப்பதற்கு செயற்பட வேண்டுமென்றும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

ஆசிய ஊடக மற்றும் கலாச்சார சங்கமும் இஸ்லாமிய கல்வி கேந்திர நிலையமும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தொடர்ந்து உரையாற்றுகையில் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தை அறிக்கையிடுவதில் நாட்டில் சில ஊடகங்களின் செயற்பாட்டு முறையை அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் எற்பட்ட சமூகத்தின் மீதான துயரத்தின் காரணமாக இந்த ஊடகம் தமது பொறுப்பக்களை புறந்தள்ளி செயற்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.

தற்பொழுது நாட்டின் இளைஞர்களுள் 55 சதவீதமானோர் தகவல்களை அறிந்து கொள்வது சமூக வலைப்பின்னல் உடாகவே ஆகும்.

இதனால் சமூக வலைப்பின்னல்கள் பொதுமக்களுக்கு தகவல்களை வழங்கும் பொழுது மிகவும் அவதானமாகவும் செற்பட வேண்டும் என்று அரசாங்க தவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவௌ மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment