முஸ்லிம்களின் திருமணச் சட்டத்தில் அத்தியவசியமான சில சரத்துக்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான யோசனைக்கு, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
இதற்கமைய, குறித்த யோசனை, நீதி அமைச்சர் தலதா அத்துகோரலவினால் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் தலதா அத்துகோரலவினால் முன்வைக்கப்பட்ட முஸ்லிம்களின் திருமணச் சட்டத் திருத்த யோசனை குறித்து, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்ந்துள்ளனர் என, முன்னாள் அமைச்சரும், ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
வயது எல்லை, திருமணம் செய்துகொள்ளும் பெண்ணின் இணக்கத்தை அறிதல் உள்ளிட்ட சில சரத்துகளில் திருத்தங்களை மேற்கொள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இதற்கமைய, முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்யும் குறைந்தபட்ச வயதெல்லையை, 18 ஆக அதிகரிக்க இணங்கப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.
ஐ.ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment