பைஸர் முஸ்தபாவை நேரடி விவாதத்துக்கு வருமாறு நிஸ்ஸங்க சேனாதிபதி அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, July 14, 2019

பைஸர் முஸ்தபாவை நேரடி விவாதத்துக்கு வருமாறு நிஸ்ஸங்க சேனாதிபதி அழைப்பு

பாதுகாப்பு அமைச்சுக்கு திருட்டுத்தனமாக கடிதம் கொடுத்து, சட்ட விரோத ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்டதாக, தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானது என்றும், இது என்மீது சேறு பூசும் ஒரு நடவடிக்கையே என்றும், முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஆயுத கொடுக்கல் வாங்கலின் போது மோசடியில் ஈடுபடவில்லை எனக் கூறுவதாயின், தன்னுடன் பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வருமாறு, எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவுக்கு சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, பைஸர் முஸ்தபா எம்.பி. மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு, தேவையானால் இது தொடர்பில் எந்தவொரு விசாரணையையும் நடாத்தட்டும். எந்தவொரு ஆயுதக் கொடுக்கல் வாங்கலுடனும், தனக்கு எந்தவிதத் தொடர்புகளும் இல்லையென்றும் பொறுப்புடன் கூறுகின்றேன்.

சட்ட விரோத ஆயுதக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில், தன்னிடம் ஆவணங்கள் இருப்பதாக நிஸ்ஸங்க சேனாதிபதி கூறியுள்ளார். ஆனால், அவ்வாறு இருந்தால், அதனை உரிய இடங்களுக்கு ஒப்படைக்குமாறும் பைஸர் முஸ்தபா எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.ஏ. காதிர் கான் 

No comments:

Post a Comment