ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்க்கலாம் - கல்வி அமைச்சர் அகில விராஜ் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 10, 2019

ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்க்கலாம் - கல்வி அமைச்சர் அகில விராஜ்

தேசிய பாடசாலைகளில் 03 வருடங்களுக்கும் மேலாக சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்கள், அவர்கள் கல்வி கற்பிக்கும் பாடசாலைகளில் அவர்களது பிள்ளைகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, உரிய அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவுறுத்தியுள்ளார்.

பாடசாலைகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களை வழிநடத்தும் ஆசிரியர்கள், தங்கள் பிள்ளைகளை அவர்கள் கல்வி கற்பிக்கும் பாடசாலையில் சேர்ப்பதை இலகுவாக்குவதற்காக அமைச்சர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம் ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்படுவதோடு, சிறந்த மனநிலையுடன் அவர்களது பணிகளை மேலும் திறன்பட மேற்கொள்வார்கள். இதன் மூலம் அவர்களது கற்பித்தல் நடவடிக்கைகளை மிகவும் திறம்பட செய்வதற்கு வாய்ப்புக் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment