சிறைச்சாலையில் புலனாய்வு பிரிவொன்றை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக ஆணையாளர் நாயகத்தின் அதிகார மற்றும் நிர்வாகத்துக்கு உட்பட்டதாக சிறைச்சாலையில் பயனுள்ள நிர்வாகம் மற்றும் ஒழுக்கத்தை பேணும் நோக்கில் குறித்த சிறைச்சாலை புலனாய்வு பிரிவை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள சமர்ப்பித்த ஆவணத்துக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment