கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் அதிசிறந்த திறமையை உறுதிப்படுத்தும் மாணவர்களுக்கு சர்வதேச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இது தொடர்பான விசேட நிதியமொன்றை ஏற்படுத்துவதற்கும் அதற்கான சட்ட திட்டங்களைத் தயாரிப்பதற்காக உரிய பிரிவினருக்கு பணிப்புரைகளை வழங்கும் வகையிலுமான யோசனை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அமைச்சரவை அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
க. பொ. த. உயர்தரத்தில் பௌதீக விஞ்ஞானம், விஞ்ஞானம் தொழில் நுட்பம் மற்றும் கலைத்துறையில் அதிசிறந்த சித்திகளைப் பெற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கு 'ஒக்ஸ்போர்ட்' 'கேம்பிரிஜ்', 'ஹவார்ட்' போன்ற சர்வதேச பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான புலமைப் பரிசிலைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
இதற்கிணங்க 2019 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான நிதியம் உருவாக்குவது தொடர்பான விடயத்தை பாராளுமன்ற சட்ட மூலம் ஒன்றின் மூலம் நிறைவேற்றிக் கொள்வதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment