கடந்த ஆட்சிக் காலத்தில் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக எந்த விதமான கேள்விப் பத்திரங்களும் கோரப்படாமலேயே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. எனினும் எமது ஆட்சிக் காலத்தில் எந்த விதமான முறைகேடுகளுமின்றி வீதி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.
தீவிர பொறுப்பு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் தீர்மானங்கள் உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனைக் குறிப்பிட்டார்.
கிண்ணியா பிரதேசத்தில் இரண்டு பாலங்கள் இடிந்துபோகும் நிலையில் காணப்படுகின்றன. இவற்றை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐந்தாயிரம் மாணவர்கள் கடந்து செல்லும் குறிஞ்சாகேணி பாலத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் எதிர்வரும் மாதத்துக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கில் 2009ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை எந்த அபிவிருத்திகளையும் முன்னெடுக்காத நிலையில் பல அபிவிருத்தித் திட்டங்களை எமது அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment