ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை கல்வித் தகைமைகளை வெளிப்படுத்துமாறு அந்தக் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவே களமிறக்கப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) தெஹிவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “குறைந்தது சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறாவது உள்ள ஒருவரையே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கவுள்ளோம்.
தனக்கு கல்வித் தகுதிகள் இருப்பதாக கூறித் திரிவதில் பயனில்லை. அதனை முடியுமானால் ஊடகங்களிடமும் பொதுமக்களிடம் சமர்ப்பிக்கவும்” என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
அமைச்சர் சஜித் பிரேமதாசவின் கல்வித் தகைமை தொடர்பாக ரவி கருணாநாயக்க தொடர்ந்து விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment