தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ருஹூணு பல்கலைக்கழகத்தின் வெல்லமடம வளாகத்திலுள்ள 3 பீடங்கள் நாளை (17) திறக்கப்படவுள்ளன.
விஞ்ஞான பீடம், முதுகலை சமுத்திரவியல் மற்றும் தொழில்நுட்பப் பீடங்கள் ஆகியன நாளை திறக்கப்படவுள்ளன.
அண்மையில், பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அமைதியின்மையுடன் செயற்பட்டு பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்திருந்தனர்.
இதனால், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக வெல்லமடம வளாகத்தின் அனைத்துப் பீடங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டன.
இதேவேளை, அமைதியின்மையால் மூடப்பட்ட முகாமைத்துவ பீடம் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளதுடன், சமூக விஞ்ஞான பீடம் எதிர்வரும் 29 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக, ருஹூணு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment