பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தொலைபேசி அழைப்பு - ஒருவர் கைது! - News View

About Us

About Us

Breaking

Sunday, July 14, 2019

பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தொலைபேசி அழைப்பு - ஒருவர் கைது!

கடந்த 12 ஆம் திகதி இரவு 119 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து பாராளுமன்றத்திற்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட உள்ளதாக பொய்த் தகவல் வழங்கிய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த நபர் பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அதற்காக புறக்கோட்டையில் உள்ள முஸ்லிம் பள்ளி ஒன்றில் வைத்து 8 பேர் திட்டமிட்டதாகவும் அவர் அழைபேசி மூலம் தெரிவித்துள்ளார். 

உடனடியாக செயற்பட்ட பொலிஸார் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போது பொய்த் தகவல் என தெரியவந்துள்ளது. 

பின்னர் பொய்த் தகவல் வழங்கிய நபர் நேற்று (13) பண்டாரவளை, எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

53 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடப பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

குறித்த நபர் வாடகைக்கு உள்ள வீட்டு உரிமையாளரின் அடையாள அட்டையை பயன்படுத்தி குறித்த சிம்மை வாங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment