பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதால், நாட்டில் மின் துண்டிப்பை தவிர்க்க முடியுமென, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.
அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு மின்சாரம் தயாரிப்பதற்கான எரிபொருளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன், இலங்கை மின்சார சபை எட்டியுள்ளதாகவும், அதன் மூலம் மின் துண்டிப்பை தவிர்க்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்
ரூபா 80 பில்லியன் நிலுவைத் தொகையை இலங்கை மின்சார சபை செலுத்த தவறியதை தொடர்ந்து, நேற்று முன்தினம் (08) இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் வழங்குவதை இடைநிறுத்தியது. இதன் விளைவாக மின்னுற்பத்தி தொகுதியின் நிலைப்பை உறுதிப்படுத்தும் வகையில் நாட்டின் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேர மின் துண்டிப்பை மேற்கொள்ள நேரிட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சு மற்றும் பெற்றோலியவள அபிவிருத்தி அமைச்சு மற்றும் செயலாளர் உள்ளிட்ட பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர், அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை ஊடாக இலங்கை மின்சார சபையினால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவையை மிக விரைவில் செலுத்தி முடிப்பதற்கும், அதுவரை மின்னுற்பத்திக்காக மின்சார சபைக்கு வழங்க வேண்டிய எரிபொருளை வழங்குவதற்கும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது.
No comments:
Post a Comment