கூட்டமைப்பின் நிலைப்பாட்டை கல்முனை வடக்கு விவகாரமே தீர்மானிக்கும் - அரியநேந்திரன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 10, 2019

கூட்டமைப்பின் நிலைப்பாட்டை கல்முனை வடக்கு விவகாரமே தீர்மானிக்கும் - அரியநேந்திரன்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்காக தனியான கணக்காளர், தனியான வங்கிக்கணக்கு திறப்பதற்கான நடவடிக்கை உடனடியாக இடம்பெறும் எனப் பிரதமர் வாக்குறுதி வழங்கியுள்ளார். இவ்விடயம் இடம்பெறாவிட்டால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாளை வாக்கெடுப்பில் எப்படி நடந்து கொள்ளும் என்பது பிரதமருக்கு நன்கு தெரியும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார். 

அவர் நேற்று (9) ஊடகங்களுக்கு விடுத்த விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'கல்முனை வடக்குத்' தமிழர்களது பூர்வீக அடையாளமாக இருக்கிறது. அதனை அழித்து அவர்களுடைய தேவைக்கேற்ப சுரண்டுவதை அனுமதிக்க முடியாது. 

முஸ்லிம் தரப்பினர் கேட்கின்ற நியாயமான எல்லையை பரிசீலிக்கலாம். ஆனால் தமிழ் சமூகத்தின் ஆள்புல எல்லைகள் மிகவும் துல்லியமாக வரையறுக்கப்பட்டாக வேண்டும். அவ்வாறு நடைபெறாமல் அரசை பயம்காட்டி நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து காரியம் சாதிக்க நினைப்பது மடமைத்தனமாகும். 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சேலைன் ஊசி மருந்தால்தான் இந்த அரசாங்கம் இன்னும் பயணிக்கிறது. நாம் சேலைன் பாச்சாவிட்டால் அரசு நடு வீதிக்கு வரும் என்பதை சகலரும் உணர வேண்டும். 

வெல்லாவெளி நிருபர்

No comments:

Post a Comment