ஸஹ்ரானின் மனைவியான காதியாவின் தகவலுக்கமைய 3 தொலைபேசி பாகங்கள் CID யிடம் : இல்ஹாமின் DNA அறிக்கை கிடைக்கவில்லை - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 10, 2019

ஸஹ்ரானின் மனைவியான காதியாவின் தகவலுக்கமைய 3 தொலைபேசி பாகங்கள் CID யிடம் : இல்ஹாமின் DNA அறிக்கை கிடைக்கவில்லை

ஷங்ரி லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹம்மட் ஸஹ்ரான் ஹாசிமுடன் ஆயுத பயிற்சி எடுத்ததாக தெரிவிக்கப்படும் அட்டாளைச்சேனை ஜலால்தீன் வீதியில் உள்ள மொஹம்மட் செயின் மொஹம்மட் றிஸ்வி என்பவரின் வங்கிக் கணக்கு விபரங்கள் மற்றும் தொலைபேசி விபரங்கள் கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று (10) கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் அறிவித்தனர்.

குறித்த சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும், கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி மொஹம்மட் ஸஹ்ரானுடன் பாசிக்குடா காத்தான்குடி ஆகிய பிரதேசங்களுக்கு பயணம் செய்த களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த நான்கு பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் வாக்குமூலங்களுக்கு அமைய, தொலைபேசி இலக்கங்கள் 5 தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அத்துடன் ஷங்ரி லா ஹோட்டலின், பிரதான சிசிடிவி காட்சிகள் அடங்கிய CD அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் அறிவித்த பொலிசார் ஸஹ்ரானின் மனைவியான அப்துல் காதர் காதியா என்பவரிடமிருந்து மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து மீரிகம மற்றும் திவுலபிட்டிய பிரதேசங்களிலுள்ள வயல் நிலங்களில் வீசியதாக தெரிவிக்கப்படும் தொலைபேசிகள் மூன்றின் பாகங்களை கைப்பற்றி மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணனிப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை ஸஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்றதாக தெரிவிக்கப்படும் எம். ஹில்மி என்பவர் ஜூன் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகவும் பயிற்சியை பெற்ற சந்தேகநபர் ஒருவர் சவூதி அரேபியாவின் ஜித்தாவில் கைது செய்யப்பட்டு CID யினால் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் CID யினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அத்துடன் ஷங்ரி லா ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்த மற்றைய நபரான மொஹம்மட் இப்ராஹிம் மொஹம்மட் இல்ஹாமின் DNA அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என தெரிவித்த CID யினர், அது தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

உரிய விசாரணைகளை மேற்கொண்டு எதிர்வரும் 24ஆம் திகதி அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு நீதவான் இதன்போது பொலிசாருக்கு உத்தரவிட்டார். 

சுபாஷினி சேனாநாயக்க

No comments:

Post a Comment