ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாத்தறை, வெல்லமடம வளாகம் கால வரையறையின்றி மூடப்படுவதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
நேற்றையதினம் (09) மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, அங்குள்ள சொத்துகளுக்கு சேதம் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றமையே இதற்கான காரணமாகுமென நிர்வாகம் அறிவித்துள்ளது.
உபவேர்ந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன உள்ளிட்ட அனைத்து பீடாதிபதிகளுக்கு இடையில் இன்று (10) இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து மாணவர்கள், ஊழியர்களின் பாதுகாப்பு கருதி குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் எடுக்கப்பட்ட ஒரு சில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் குழுவொன்று, பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டடத்தை மறித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதன்போது, நேற்றையதினம் இரு சந்தர்ப்பங்களில் கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் மாணவர்கள் அமைதியற்று நடந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment