டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு - 29,123 பேர் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, July 18, 2019

டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு - 29,123 பேர் பாதிப்பு

டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக உயர்வடைந்துள்ளதோடு, 29,123 பேர் டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்தது.

இவ்வருடத்தின் ஜனவரி முதல் இன்றையதினம் (18) வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் தாக்கம் காரணமாக 58 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, 29,123 பேர் டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதற்கு அடுத்த படியாக டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக கம்பஹாவும் இதற்கும் அடுத்த படியாக காலியும் உள்ளன.

கொழும்பில் 6,297 டெங்கு நோயாளர்களும், கம்பஹாவில் 3,825 டெங்கு நோயாளர்களும், காலியில் 2,724 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இதே காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபை பிரிவில் 1,234 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, கொழும்பு மாநகர சபை பிரிவு அறிவித்துள்ளது. இந்நிலையில், மேல் மாகாணத்தில் 12,624 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் கடந்த மே மாதத்தில் 4,239 டெங்கு நோயாளர்களும் கடந்த ஜூன் மாதத்தில் 5,498 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இம்மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,023 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், தொற்று நோயியல் பிரிவு தெரிவித்தது.

காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் மருத்துவ உதவியை நாடுமாறும், தொற்று நோயியல் பிரிவு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment