நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் மழைக்கான சாத்தியம் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 18, 2019

நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் மழைக்கான சாத்தியம்

நாளை மறுதினம் வரை தென்மேற்குப் பகுதியிலும் மத்திய மலைநாட்டிலும் மற்றும் வடமேல், மேல், தென்மேல் மற்றும் தென் கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய மழை நிலைமையில் மேலும் அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேக மூட்டமான வானம் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் குறிப்பாக மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. 

ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுமெனவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

எனவே, மின்னல் தாக்கத்திலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment