நபிகள் நாயகமும் அனுமதிக்காத டிரார் என்ற முஸ்லிம் பள்ளிவாயலை அமைப்பதற்கு அனுமதி கொடுத்தமையையிட்டு அமைச்சர் ஹலீம் பொறுப்புச் சொல்ல வேண்டும் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் கூறியுள்ளார்.
வீடுவீடாக கூலிக்கு எடுத்துக் கொண்டு டிரார் என்ற பள்ளிவாயலை அமைப்பதற்கு முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார். நபியவர்களும் இந்த பள்ளிவாயலுக்கு அனுமதி வழங்கவில்லை.
அனுராதபுர மடாடுகவில் ஒரு பள்ளிவாயலை அப்பிரதேச மக்கள் உடைத்துத்தள்ளினர். இந்த பள்ளிவாயல்களைத்தான் டிரார் பள்ளிவாயல் என அழைக்கப்படுகின்றது. இவ்வகையான டிரார் பள்ளிவாயல்களை உடைத்து தகர்த்துவிட்டு அவ்விடத்தில் குப்பைகளைப் போடுமாறு நபியர்கள் கூறியுள்ளார்.
இவ்வாறு போதனை வழங்கப்பட்டுள்ள நிலையில்தான் இவற்றுக்கு அனுமதி வழங்கியுள்ளார்கள் எனவும் பொதுபல சேனா ஞானசார தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment