உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு நேற்று அழைக்கப்பட்டிருந்தபோதும், தயாசிறி ஜயசேகர முன்னிலையாகியிருக்கவில்லை.
இதையடுத்து, அவரை பிறிதொரு தினத்தில் முன்னிலையாகும்படி தெரிவுக்குழு அறிவித்தது.
கடந்த ஜூன் 18ஆம் திகதி உரையாற்றிய தயாசிறி எம்.பி., தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படவிருந்தபோதும், ஹோட்டலில் தங்கியிருந்த பிரமுகர் ஒருவரைக் கருத்தில்கொண்டே தாக்குதல் தவிர்க்கப்பட்டது எனத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தவே தெரிவுக்குழுவில் முன்னிலையாக அவர் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்பாக சாட்சியமளிக்கப் போவதில்லையென தயாசிறி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Charles Ariyakumar Jaseeharan
No comments:
Post a Comment