பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செயற்படுத்த அமெரிக்காவை தவிர G20 அமைப்பில் இடம்பெற்றுள்ள 19 நாடுகள் உறுதியேற்றுள்ளன.
புவி வெப்பமயமாதல் பிரச்சினைக்கு காரணமான பசுமை குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த, அமெரிக்கா மற்றும் 187 நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தம், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் ஆகும்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் அமெரிக்கா விலகியது. இதற்கான அறிவிப்பை தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டார்.
இந்நிலையில், ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டின் நிறைவு நாளான இன்று பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரமாக செயற்படுத்துவது என அமெரிக்காவை தவிர G20 அமைப்பில் இடம்பெற்றுள்ள 19 நாடுகளின் தலைவர்களும் உறுதியேற்றுள்ளனர்.
No comments:
Post a Comment