வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட இளமருதங்குளம் காட்டுப் பகுதியில் நிலக்கீழ் வெடிபொருட்கள் உள்ளடங்கிய பொதி ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ்தசில்வா தலைமையிலான குழுவினர் குறித்த காட்டுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது மரமொன்றின் அடிவாரத்தின்கீழ் பிளாஸ்ரிக் பையொன்றில் சுற்றப்பட்ட நிலையில், சுமார் 25 இற்கும் மேற்பட்ட நிலக்கண்ணி வெடிகள் மற்றும் ஆர்.பீ.ஜீ ரக வெடிகுண்டு ஒன்றையும் மீட்டுள்ளனர்.
பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் குறித்த வெடிபொருட்களை செயலிழக்க செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எல்ரீரீஈ அமைப்பினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களே இவ்வாறு கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment