சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவகத்தின் கல்வி நடவடிக்கைகள் திங்கள் முதல் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 1, 2019

சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவகத்தின் கல்வி நடவடிக்கைகள் திங்கள் முதல் ஆரம்பம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (03) ஆரம்பமாகவுள்ளன.

முதலாம், இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளே ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவகத்தின் உதவி பதிவாளர் தெரிவித்துள்ளார்.

விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் நாளைய தினம் (02) விடுதிகளுக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணிக்கு முன்னர் விடுதிகளுக்கு சமூகமளிக்குமாறும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு நிலைமயை கருத்திற்கொண்டு பல்கலைக்கழகங்களின் கல்வி செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

எனினும், தற்போது நாட்டின் பாதுகாப்பு நிலை வழமைக்கு திரும்புவதைத் தொடர்ந்து, பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment