சிறைச்சாலைகளில் பாதுகாப்பு கெமராக்களை பொருத்த 480 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 1, 2019

சிறைச்சாலைகளில் பாதுகாப்பு கெமராக்களை பொருத்த 480 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

சிறைச்சாலைகளில் பாதுகாப்புக் கருவிகளை பொருத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கும் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் T.M.J.தென்னக்கோன் குறிப்பிட்டார்.

பூசா, காலி, மெகசின், களுத்துறை ஆகிய சிறைச்சாலைகள் உள்ளிட்ட அதிக கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள 18 சிறைச்சாலைகளில் பாதுகாப்பு கெமராக்களைப் பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதற்காக 480 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment