ஜே.வி.பி யினால் நல்லிணக்கம், சகவாழ்வுக்கான யோசனைகள் நாளை மறுதினம் முன்வைப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, June 2, 2019

ஜே.வி.பி யினால் நல்லிணக்கம், சகவாழ்வுக்கான யோசனைகள் நாளை மறுதினம் முன்வைப்பு

அடிப்படைவாதத்தை ஒழித்து தேசிய நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் ஏற்படுத்தும் சில யோசனைகளை நாளை மறுதினம் (04) வெளியிட மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். 

ஜே.வி.பி. கொண்டுவரவுள்ள யோசனைகள் மூலம் அடிப்படைவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கான யோசனைகள் உள்ளடங்கும் என்பதுடன், தேசிய சகவாழ்வையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக முக்கிய யோசனைகள் வெளிப்படுத்தப்படும். 

யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2009ஆம் மற்றும் 2010ஆம் ஆண்டுகளிலும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான யோசனைகளை ஜே.வி.பி. முன்வைத்திருந்தது.

என்றாலும், அந்த யோசனைகளை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குப்பைக் கூடைக்குள் தூக்கி வீசியிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.   

No comments:

Post a Comment