இலங்கைக்கான சுற்றுலாப் பயணங்களுக்கு ஐரோப்பிய நாடுகளால் விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை தளர்த்தப்பட்டுள்ளது.
நெதர்லாந்து, ஜேர்மன், இத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் பயணத் தடையைத் தளர்த்தியுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலை அடுத்து பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கைக்கான பயணத் தடையை விதித்திருந்தன.
எனினும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கான பயணத்தடையை தளர்த்தியுள்ளன.
எனினும், இலங்கைக்கு சுற்றுலா வரும் போது மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தமது நாட்டு பிரஜைகளுக்கு குறித்த நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.
No comments:
Post a Comment