தங்காபரணங்களுடன் கட்டுநாயக்க விமான நிலைய பெண் துப்புரவு பணியாளர் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, June 1, 2019

தங்காபரணங்களுடன் கட்டுநாயக்க விமான நிலைய பெண் துப்புரவு பணியாளர் கைது

இரண்டு கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய தங்காபரணங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பெண் துப்புரவு பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காபரணங்களின் பெறுமதி ஒரு பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயசிங்க தெரிவித்தார்.

விமான நிலையத்தின் பாதுகாப்பு பிரிவினரால் குறித்த ஊழியர் சுங்க திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பயணியொருவரால் தங்காபரணங்கள் ஊழியருக்கு வழங்கப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பெண் ஊழியர், தங்காபரணங்களை விற்பனை செய்வதற்கு முயன்ற போதே விமான நிலையத்தின் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment