கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றைய தினம் ஒம்புட்ஸ்மன் காரியாலயத்தை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
மக்கள் முகம் கொடுக்க நேர்ந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே மேற்படி ஒம்புட்ஸ்மன் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தினமும் மேற்படி காரியாலயத்தில் இருந்து மக்களின் முறைப்பாடுகளைப் பொறுப்பேற்பர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளால் மக்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள பிரச்சினைகளை மேற்படி காரியாலயத்தில் சமர்ப்பிக்க முடியும் எனப் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ள அவர், அது அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதலின் பின்னர் நாட்டின் அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதன்மூலம் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் சில குழுக்கள் தம்மை சந்தித்து தமது பிரச்சினைகளை முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். அத்தகைய பிரச்சினைகள் எடுத்துக்கொண்டு தாம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து அவற்றுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்குமாறு பிரதமரைக் கோரியதாகவும் அவர் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment