உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மாதிரிக் கிரமாமொன்றை உருவாக்க வீடமைப்பு மற்றும் கலாசார விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, குறித்த விசேட மாதிரிக் கிராமத்தை மண்முனை வடக்கில் உருவாக்கவும் வீடமைப்பு மற்றும் கலாசார விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கான மொத்த செலவீனத்தை வீடமைப்பு அமைச்சு ஏற்றுக்கொள்ளும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார விவகார அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
குண்டு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட சீயோன் தேவாலயத்திற்கு நேற்று முன்தினம் (01) அமைச்சர் விஜயம் செய்தபோதே, இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் தனது விஜயத்தின்போது, குண்டு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இதன்போது, பாதிக்கப்பட்ட மக்களின் உடனடிப் பிரச்சினைகள் தொடர்பாகவும் அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டன.
அத்தோடு, குண்டு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட சீயோன் தேவாலயத்தை புனரமைக்கும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் அமைச்சர் கலந்துரையாடினார்.
உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில், 26 பேர் உயிரிழந்ததோடு, 22 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment