அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி ஆகியோரை பதவி நீக்குமாறு கோரி கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தம் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அது தொடர்பான கடிதத்துடன் தலாதா மாளிகைக்கு சென்ற மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன அதனை அத்துரலிய ரத்னதேரரிடம் கையளித்ததையடுத்து அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
அத்துரலியே ரதனதேரர் கடந்த மே 31ஆம் திகதி வரலலற்றுப் புகழ்மிக்க தலதா மாளிகையின் மஹமலுவே பூமியில் சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். அவர் நான்கு தினங்களாக உணவின்றி நீரை மட்டுமே அருந்தி வந்தார்.
இதேவேளை, ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளிலிருந்து இராஜினாமாச் செய்வதாக ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தனர். அந்தக்கடிதம் ஜனாதிபதியினால் அத்துரலிய ரதன தேரருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
உண்ணாவிரதத்தைக் கைவிட்டதையடுத்து அத்துரலியே ரதன தேரர் கண்டி போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வைத்தியசாலைக்கு வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் அவரை அம்பியூலன்ஸ் வண்டியின் மூலம் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.
எம். ஏ. அமீனுல்லா
No comments:
Post a Comment