நாடாளுமன்றில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது - News View

About Us

About Us

Breaking

Sunday, June 2, 2019

நாடாளுமன்றில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது

இம்மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் குறித்த அறிக்கையினை நாளை இடம்பெறும் குழுக் கூட்டத்தின் பின்னர் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரும் ஐ.தே.க. உறுப்பினருமான மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்த சுற்று நிருபத்தை நாளை குழு உறுப்பினர்களுடன் வழங்கவுள்ளதாகவும், அவர்கள் அதில் ஏதாவது உள்ளடக்க வேண்டிய தேவை ஏற்படின் நாடாளுமன்றத்தில் சமப்பிப்பதற்கு முன்னர் 2 வாரங்களுக்குள் அந்த விடயங்களை உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான சட்ட மூலத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக எதிர்க்கட்சி மற்றும் சிவில் சமுதாயம் உள்ளிட்ட பல தரப்பினர்களை உள்ளடக்கிய இந்தக்குழு உறுப்பினர்களினால் பரிந்துரைக்கப்படும் விடயங்களும் இதில் உள்ளீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான வரைபு ஆரம்பத்தில் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டதைப் போன்று இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த திருத்தத்தில் 8 முதல் 10 வரை முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், எனவே இந்த சட்ட மூலத்தினை விமர்சித்தவர்கள், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட வரைபினை விட இது மிகவும் வித்தியாசமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அத்தோடு இந்த சட்ட மூலமானது முன்வைக்கப்பட்ட சட்டமூலத்தை விடவும் மிகச் சிறந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment