அனுமதிப் பத்திரத்துடன் அரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உரிமைப் பத்திரம் - அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல - News View

About Us

About Us

Breaking

Sunday, June 30, 2019

அனுமதிப் பத்திரத்துடன் அரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உரிமைப் பத்திரம் - அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல

நாடளாவிய ரீதியில் 25 இலட்சம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், தற்போது அரச காணிகளில் அனுமதிப் பத்திரங்களுடன் வசிக்கும் மக்களுக்கு காணி உரிமைப் பத்திரத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

அது தொடர்பான சட்ட மூலம் ஒன்றைப் பாராளுமன்றத்தில் (28) சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல சமர்ப்பித்தார். 

அது தொடர்பில் அமைச்சர் தெரிவிக்கையில் இச்சட்டமூலம் முழு நாட்டிற்கும் உரிய வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1920 களில் இருந்து அரச காணிகளில் வசிப்பவர்கள் காணி உரிமை பத்திரமின்றி அனுமதி பத்திரங்களையே வைத்துள்ளனர். 

இவர்களுக்கு வங்கிக் கடன்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளது. மேற்படி காணிகளைத் தமது பிள்ளைகளுக்கும் பெற்றுக் கொடுக்க முடியாத நிலை உள்ளது. அவ்வாறானவர்களுக்கு அக்காணிகளுக்கான காணி உரிமைப் பத்திரங்களை வழங்குவது இச்சட்டத்தின் நோக்கமாகும்.

இந்தக் காணி உரிமைப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்பவர்கள், அக்காணிகளை அபிவிருத்தி செய்வதற்கான கடன்களையும் வங்கிகள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்றார். 

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்

No comments:

Post a Comment