முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தொடர்பில் முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக 3 சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இன்று (04) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை காலை 08.00 மணியிலிருந்து மாலை 04.00 மணி வரை எழுத்து மூலம் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பெற்றுக் கொள்ளப்படும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
No comments:
Post a Comment