ஆனமடுவ - சிலாபம் வீதியின் ரதஒலாஓயா பாலத்திற்கு அருகில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றை கண்டெடுத்துள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (31) மாலை குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பாலத்திற்கு அருகே உள்ள பற்றைக்குள் சந்தேகத்திற்கு இடமான பொருள் ஒன்று கிடப்பதாக நபர் ஒருவர் வழங்கிய தகவல் ஒன்றை அடுத்து, அங்கு சென்ற பொலிஸார் போத்தல் ஒன்றில் அடைக்கப்பட்ட கைக்குண்டை மீட்டுள்ளனர்.
SHG 87 வகையைச் சேர்ந்த குறித்த கைக்குண்டு, வெடிக்கக் ௯டிய நிலையில் இருந்ததாக பல்லம பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ த சில்வா தெரிவித்தார்.
குறித்த கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்பட்டவில்லை எனத் தெரிவித்த அவர், பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ௯றினார்.
புத்தளம் நிருபர் ரஸ்மின்
No comments:
Post a Comment