போதைப் பொருள் மற்றும் 7 லட்சம் ரூபா பணத்துடன் ஆவா குழு உறுப்பினர் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, June 1, 2019

போதைப் பொருள் மற்றும் 7 லட்சம் ரூபா பணத்துடன் ஆவா குழு உறுப்பினர் கைது

ஐஸ் என்ற போதைப் பொருள் மற்றும் 7 லட்சம் ரூபா பணத்துடன், ஆவா குழு உறுப்பினர் ஒருவரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சக்தி என்ற இளைஞரே நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளார். 

வல்வெட்டித்துறை பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சக்தி என்ற நபரின் வீட்டை சோதனையிட்ட போதே, 4 கிராம் கஞ்சா மற்றும் 3 மில்லி கிராம் ஜஸ் போதைப் பொருள் உட்பட 7 லட்சம் ரூபா பணம் மற்றும் வங்கி பற்றுச்சீட்டுக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. 

இந்த இளைஞர் சக்தி என்ற பெயருடன் வாள் வெட்டுக் குழுவை நடத்தியதாகவும், பல வாள்வெட்டுக் குழுக்களுடன் தொடர்புடையவர் என்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்த நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும், விசாரணையின் பின்னர் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

யாழ். நிருபர் சுமித்தி

No comments:

Post a Comment