வியாழேந்திரனுடன் உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்தார் சுமணரத்ன தேரர் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 1, 2019

வியாழேந்திரனுடன் உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்தார் சுமணரத்ன தேரர்

மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் நாடளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுடன் உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்துள்ளார்.

மட்டக்களப்பு, காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று (சனிக்கிழமை) காலை 7 மணியளவில் வியாழேந்திரன் இப்போராட்டத்தை ஆரம்பித்தார்.

அதைனத் தொடர்ந்து குறித்த போராட்டத்தில் சுமணரத்ன தேரரும் பங்கெடுத்துள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் உடனடியாக பதவி விலகவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இதற்கு முன்னர் கண்டி அதுரலிய ரத்ன தேரர் மேற்குறித்த விடயத்தை முன்னிறுத்தி நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். அவரின் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

அதுரலிய ரத்ன தேரரின் இப்போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் சுமணரத்ன தேரர் ஆகியோர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment