சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு இன்று(2) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வு தனியார் விருந்தினர் மண்டபத்தில் 5 மணியளவில் சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்க தலைவர் எம்.எஸ்.எம். முபாறக் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது ஹிராஅத் ஓதி நிகழ்வை அஷ்ஷெய்க் நப்ராஸ் ஹனீபா ஆரம்பித்து வைத்ததுடன் பிரதம விருந்தினராக இராணுவத்தின 24 ஆவது கட்டளைத் தளபதி மகிந்த முதலிகே கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா உள்ளிட்ட படை உயரதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அஷ்செய்க் எம்.எம்.எம் முனீர் (நளீமி) சிறப்பு மார்க்க சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து அம்பாறை அரசாங்க அதிபர் பண்டார நாயக்க கல்முனை ஸ்ரீ சுபத்திரராம விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்க தலைவர் எம்.எஸ்.எம் முபாறக் இராணுவத்தின 24 ஆவது கட்டளைத் தளபதி மகிந்த முதலிகே ஆகியோரும் உரையாற்றினர்.இறுதியாக அதிதிகளுக்கு நினைவுகேடயங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment