அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, June 30, 2019

அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்வதற்கான, அமைச்சரவைப் பத்திரமொன்றை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் மனோ கணேசன் எடுத்துள்ளார்.

அரசியல் கைதிகளுக்கு ஆறு மாதங்கள் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்யும் வகையில் இந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி கோரப்படவுள்ளது.

தற்போது இந்த அமைச்சரவைப் பத்திரத்தை வரையும் பணிகள் நடந்து வருவதாகவும், அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்டு அமைச்சரவையில் இது சமர்ப்பிக்கப்படவும் உள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அல்லது ஆறு மாத காலத்திற்கு அவர்களை புனர்வாழ்வு அளித்து விடுவிக்குமாறு இப்பத்திரத்தில் அமைச்சர் மனோ கணேசன் முன்மொழியவுள்ளார்.

அமைச்சரவையில் இந்தப் பத்திரம், சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது குறித்து விவாதித்து, சிறந்த வழியை தீர்மானிக்க முடியும். மிகவும் உணர்வுபூர்வமான விவகாரமான தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு அவசரமாக தீர்வு காணப்பட வேண்டியுள்ளது. 

15 ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் கைதி ஒருவர் அண்மையில் நோயுற்ற நிலையில் மரணமானார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment