புற்றுநோய்க்கான மருந்து இறக்குமதியின்போது இடம்பெற்ற முறைகேடு தொடர்பிலான விசாரணைகளுக்காக மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் வசந்த திசாநாயக்க, ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சாட்சி விசாரணைகளுக்காக அவர் நாளைய தினம் (முதலாம் திகதி), 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார்.
இதனைத் தவிர, குறித்த மோசடி தொடர்பில் இரண்டு தனியார் ஔடத சங்கங்களின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் நாளைய தினம் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், Batticaloa Campus’ தனியார் நிறுவனத்திற்காக காணி ஒதுக்கீடு செய்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலங்கை மஹாவெலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமும் நாளைய தினம் ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார்.
No comments:
Post a Comment