பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் மஞ்சுள பொல்கம்பல கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 10.45 மணியளவில், குறித்த பிரதேச சபையின் உப தலைவர் மற்றுமொரு நபருடன் நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
இதன்போது பிரதேச சபை உப தலைவரால், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள், குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment