மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘Batticaloa Campus’ தொடர்பில் விரைவில் தகவல்களை வழங்குமாறு கடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு, பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளது.
சில விடயங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் தகவல்களைக் கோரியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கற்பித்தல் செயற்பாடுகளுக்காக பங்குபற்றும் விரிவுரையாளர்களின் எண்ணிக்கை, உபவேந்தர் பற்றிய தகவல்கள், அந்த நிறுவனம் தொடர்பிலான வேறு தகவல்கள் என்பன கோரப்பட்டுள்ளதாக ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனம் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு முன்னெடுக்கும் ஆரம்பகட்ட விசாரணைகளுக்கென இந்த தகவல்களை முன்வைக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment