தென்கிழக்குப் பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 4, 2019

தென்கிழக்குப் பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பம்

அசாதாரன சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.

பொறியியல், கலை கலாசார, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி, பிரயோக விஞ்ஞான, தொழில்நுட்பவியல், வர்த்தக முகாமைத்துவப் பீடங்களின் அனைத்துக் கல்வி நடவடிக்கைளும், ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) பிற்பகல் 05.00 மணிக்கு முன்னர் தத்தமது விடுதிகளுக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும்; அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எம்.எஸ்எம். ஹனீபா - ஒலுவில் நிருபர்

No comments:

Post a Comment