நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான நெருக்கடியில் நாங்கள் அநாவசியமாக குழம்ப வேண்டிய அவசியம் இல்லை - News View

About Us

About Us

Breaking

Thursday, May 30, 2019

நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான நெருக்கடியில் நாங்கள் அநாவசியமாக குழம்ப வேண்டிய அவசியம் இல்லை

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான நெருக்கடியில் நாங்கள் அநாவசியமாக குழம்ப வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.

அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் வலையமைப்பினால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யவதிகளின் ஆளுமை விருத்தி மற்றும் நவீன தொழில் நுட்பத்தை விருத்தி செய்வதை நோக்காகக் கொண்ட காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இந்த நாட்டிலே ஒரு முழு நிறைவான சமாதானம் தோற்றுவிக்கப்படுவதற்கு இளைஞர் யுவதிகளின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.

தற்போதைய நிலையில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சூழலையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இவற்றுக்கு இன ரீதியான முறுகல் நிலைகளும் சவாலாக உள்ளன.

இக்காலகட்டத்தில் நாட்டில் அமைதியான சூழல் நிலவுவதற்காக தற்போது அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டாலும், இந்நாட்டிலே ஒவ்வாறு இளைஞரும் சுதந்திரமாக வாழ வேண்டும், அவர்களுக்கான உரிமைகளை அவர்கள் அனுபவிக்க வேண்டும். இந்நிலையில் இளைஞர்கள் இன்று யோசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இளைஞர்களின்போக்கு கடும் வித்தியாசமாக இருந்தது. போதைப்பொருளில், காதல் விவகாரங்கள், கையடக்கத் தொலைபேசிகள் வழியாக சமூக ஊடகங்கள் வழியாகவும் சில இளைஞர்களும், யுவதிகளும், பிறழ்வான நடத்தைகளில் மூழ்கியிருந்தார்கள்,

தற்போதும், ஆனாலும் சில செயல்கள் நடந்தேறி வருகின்றன. அதனை நாங்கள் ஒருபோதுமே அனுமதிக்க முடியாது. எனவே அதிலிருந்து விடுபட்டு ஒவ்வாரு புத்தியுள்ள இளைஞர்களும் சிந்திக்கின்ற தருணமாக தற்போதைய சூழலை மாற்றியமைக்க வேண்டும்.

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு யாப்பின் 3 ஆம் அத்தியாயத்தில் உள்ள அடிப்படைய உரிமையில் உள்ள அனைத்து உரிமைகளையும், ஒவ்வொரு தனிமனிதனும் அனுபவிக்க வேண்டும். அதில் பாரபட்டசம் காட்டக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது அவ்வாறு பாரட்பட்சம் காட்டப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அங்கு அடிப்படை மீறல்கள் உள்ளதாக நாங்கள் கருதமுயும்.

நாட்டில், தொழில் இல்லாப் பிரச்சினை, சுதந்திரமாக நடமாட முடியாத பிரச்சினை, சுதந்திரமாக வேலை செய்ய முடியாத பிரச்சினை, கடந்த 28 வருட காலமாக நாங்கள் அனுபவித்து வந்த பிரச்சினை தற்போது மீண்டும் வந்திருக்கின்றது. அது தற்போது வேறொரு ரூபத்தில் வந்திருக்கின்றது.

ஆனால் நாங்கள் ஒருபோதுமே சளைக்காமல், தலைகுனியாமல், இந்த நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும். எமது சமூதாயத்திற்காகவும், உழைக்க வேண்டும்.” என்றார்.

No comments:

Post a Comment