பெண் பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை - News View

About Us

About Us

Breaking

Saturday, May 11, 2019

பெண் பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுலின் கிழக்கு பகுதியில் வசித்து வருபவர் மீனா மங்கள் என்ற பெண்மணி. 

பத்திரிகையாளரான இவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கலாசார ஆலோசகராகவும் இருந்து வந்துள்ளார். மேலும், இவர் உள்ளூர் தொலைக்காட்சி னல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார். 

இந்நிலையில், மீனா மங்கள் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இவரது உடலை கைப்பற்றி, படுகொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வருட தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 15 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில் 9 பேர் ஒரே நாளில் பலியானதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment