மஹிந்த ஆட்சிக்கு வந்தால் கிழக்கில் தமிழரை முதலமைச்சராக்குவோம் - News View

About Us

Add+Banner

Friday, May 31, 2019

demo-image

மஹிந்த ஆட்சிக்கு வந்தால் கிழக்கில் தமிழரை முதலமைச்சராக்குவோம்

Chandrakumar-720x450
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கிழக்கு மாகாண சபைக்கு தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவோம் என பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு இருதயபுரத்தில் உள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான எமது கட்சியின் பணிகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 326 கிராம சேவையாளர் பிரிவிலும் விரிவுபடுத்தியுள்ளோம்.

எங்களது கடந்த ஆட்சிக்காலத்தில்தான் கிழக்கு மாகாண சபைக்கு தமிழ் முதலமைச்சரை கொண்டுவந்தோம். 58 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கினோம்

தற்போது இரண்டாயிரம் பட்டதாரிகள் எமது கட்சியுடன் இணைந்துள்ளனர். எமது ஆட்சி வந்தால் அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பை வழங்குவோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 வீதம் உள்ள தமிழ் மக்களுக்கு அரசியல் பலம் இல்லை 75 வீதம் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஒருவருக்கு மாத்திரமே தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் 24 வீதம் உள்ள முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளுக்கு தலைமை பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றி முஸ்லிம் கட்சிகளுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளது” என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *