எஸ்.எம்.எம். முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் செம்மண்ஓடை பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கு பயன்படுத்து மெகசீன் மற்றும் ரவைகளும் இன்று (30.05.2019) வியாழக்கிழமை கண்டெடுத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன தெரிவித்தார்.
குறித்த பிரதேசத்தில் கைவிடப்பட்ட பொருள் ஒன்று கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் குறித்த பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது பிளாஸ்ரிக் குழாய் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கால்வாயில் மேற்படி பொருட்கள் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குறித்த பிரதேசத்தில் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment