அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, April 12, 2019

அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. வழமையான தினங்களில் நெடுஞ்சாலைகளில் 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரையிலான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றன. 

எனினும், இந்தப் பண்டிகைக் காலத்தில் நாளொன்றிற்கு ஒரு லட்சத்து ஐயாயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் வரையிலான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதாக அதிவேக நெடுஞ்சாலை செயற்பாட்டு மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார் 

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு அமைவாக சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வாகனங்கள் உள்நுழைதல் மற்றும் வெளிச் செல்வதற்கான மேலதிக வாயில்களும் திறக்கப்பட்டுள்ளன. மேலதிக ஊழியர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க கூறினார். 

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வாகனங்களின் தரத்தை பரிசோதனை செய்து குறித்தத்தரம் உறுதிப்படுத்தப்படும் வாகனங்களே நெடுஞ்சாலைக்குள் உட்பிரவேசிக்க அனுமதிக்கப்படுகின்றன. 

அத்துடன், மணித்தியாலத்திற்கு 60 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடிய வாகனங்கள் மாத்திரமே அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்க முடியும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment