மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின், கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்திலுள்ள செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயத்தில் மூன்று மாடிகளைக் கொண்ட ஆராதனை மண்டபத்துடன் கூடிய வகுப்பறைக் கட்டடம் அமையப்பெறவுள்ளது.
இவ்வகுப்பறைக் கட்டடத்தை அமைக்க சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் நிதியொதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும், அதற்கான மதிப்பீட்டு அறிக்கையினை தயார் செய்து தருமாறும் கோரி அறிவுறுத்தல் கடிதம் ஒன்றும் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மூன்று மாடிகளைக் கொண்ட ஆராதனை மண்டபத்துடன் கூடிய வகுப்பறைக் கட்டடமொன்றை அமைக்க அயராது பாடுபட்டு, திறமையாக செயட்பட்டு வரும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் கல்குடா தொகுதி இணைப்பாளர் ஐ.சபீக் அவர்களுக்கு செம்மண்ணோடை மக்கள் சார்பாகவும், பழைய மாணவர் சங்கம் சார்பாகவும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
No comments:
Post a Comment