குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு 7500 அமெரிக்க டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டு இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவர் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
பொரள்ளை, கிங்ஸ்லி வீதியில் நேற்று முன்தினம் (31) அதிகாலை 5.15 மணியளவில் குடிபோதையில் முச்சக்கரவண்டி மோதிய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி ஓட்டுனர் காயங்களுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜரான திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment