மிரிஜ்ஜவிலயில் மேலும் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம் பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 2, 2019

மிரிஜ்ஜவிலயில் மேலும் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம் பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவிப்பு

மிரிஜ்ஜவில ஏற்றுமதி செயற்பாட்டு வலயத்தில் மற்றுமொரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. சுஜி இன்டர்நஷனல் நிறுவனம் இதற்கான முதலீட்டை மேற்கொள்வதாக அபிவிருத்தி திறைமுறைகள், சர்வதேச வர்த்தக பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை ஜீரணிக்க முடியாத எதிர்க்கட்சியினர் பொறாமை காரணமாகவே பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

மிரிஜ்ஜவிலவில் இந்திய நிறுவனத்தினால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கான முதலீடு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த சுஜி இன்டர்நஷனல் நிறுவனம் மற்றுமொரு சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க முன்வந்துள்ளது. இது தொடர்பில் நாளை (இன்று) புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு மற்றும் அபிவிருத்தி திறைமுறைகள், சர்வதேச வர்த்தக அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதியமைச்சர் நளின் பண்டார இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்தப் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு 17 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யப்படவுள்ளது. இந்த முதலீடானது 20 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. 600 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது.

குறுகிய காலத்தில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். எதிர்க்கட்சியினர் முன்வைத்த விமர்சனங்களை ஏற்றுக் கொள்கின்றோம். 1978ஆம் ஆண்டிலிருந்து 17.4 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

இதில் கடந்த 3 வருடங்களில் மாத்திரம் 5.58 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடி முதலீடுகளை எம்மால் நாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த ஏற்றுமதி செயற்பாட்டு வலயத்தினால் மாத்திரம் முதலீடுகள் வரவில்லை. அதனைவிட 1500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment