எலக்ரிக் வாகன இறக்குமதி, கார்பன் வரி என்பவற்றில் மாற்றம் செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, April 1, 2019

எலக்ரிக் வாகன இறக்குமதி, கார்பன் வரி என்பவற்றில் மாற்றம் செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பு

எலக்ரிக் வாகனங்களுக்கான கார்பன் வரி மற்றும் இறக்குமதி வரி என்பவற்றில் மாற்றம் செய்ய எதிர்பார்த்திருப்பதாக நிதியமைச்சர் தெரிவித்தார். 

110 கிலோவட்ஸிலிருந்து எலக்ரிக் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனினும், 100 கிலோவட்ஸ் இலத்திரனியல் வாகனங்களுக்கே இறக்குமதி வரி சாதகமாக உள்ளது என அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். 

2015ஆம் ஆண்டு அதிகமான எலக்ரிக் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டபோதும், சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கு தனியார் துறையினரை ஊக்குவிக்கும் வகையில் வரிகள் அமையவில்லையென்ற குற்றச்சாட்டுக் காணப்படுகிறது. 

இரண்டு தனியார் நிறுவனங்களுடன் எலக்ரிக் வாகனங்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், எதிர்காலத்தில் இலத்திரனியல் வாகனங்கள் அதிகமாகப் பயன்பாட்டிலிருக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார். 

நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படும் பழைய வாகனங்களுக்கு அதிக கார்பன் வரிகளை அறவிடுவதற்கு அரசாங்கம் முன்மொழிந்திருந்தது. எனினும், இந்த யோசனை பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. வசதி குறைவானவர்கள் பயன்படுத்தும் நீண்டகால வாகனங்களுக்கு அதிகரித்த கார்பன் வரி அறவிடுவது பொருத்தமற்றது என விமர்சனங்கள் சுட்டிக்காட்டின. இது தொடர்பில் அரசாங்கம் ஆராயவிருப்பதாக இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment