பொதுமகன்கள் இருவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சிவபாதம் குகநேசன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (31) இலங்கை தமிழரசுக் கட்சியின் முப்புரம் வட்டாரத்திற்கான மூலக்கிளை நிர்வாகத் தெரிவு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் முன்னிலையில் நடைபெற்றது.
மூலக்கிழையின் தலைவராக தேவிபுரம் பகுதியினை சேர்ந்த இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இருவருக்கும் இடையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிர்வாகத் தெரிவில் தலைவருக்கான வாக்கெடுப்பு தேர்வில் முல்லை ஈசன் வெற்றி பெறுள்ளார் முப்புரம் வட்டாரத்தினை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் சிவபாதம் குகநேசன் தோல்வியுற்றுள்ளார்.
இதன் பின்னர் பொதுமகன்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கு அமைவாக, புதுக்குடியிருப்பு பொலிசாரால் இலங்கை தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் சிவபாதம் குகநேசன் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரை, இன்று (01) நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது ஒரு இலட்டம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து குறித்த வழக்கு எதிர்வரும் மே 28 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
மாங்குளம் நிருபர் - எஸ். தவசீலன்
No comments:
Post a Comment